tamilnadu

img

எச்.ஐ.வி மருந்தின் சிக்கலும் மாற்றுத் தீர்வும் - ஈ.கோலை

தகவல் அறிவோம்

எய்ட்ஸ்க்கு ஏன் இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை? உயிரியல் படித்த ஒவ்வொரு மாணவரும் சந்தித்த கேள்விகளில் இதுவும் ஒன்றாக நிச்சயம் இருந்திருக்கும். இக்குறைபாட்டுக்குக் (சின்ட்ரோம்-இதனை நோய் என்று விநோதமாக குறிப்பிடும் பழக்கம் நமக்கு இருக்கிறது. உதாரணம்- சர்க்கரை நோய்) காரணமான எச்.ஐ.வி தொடர்ந்து தனது வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். தனது RNA வை DNA வாக மாற்றி அதனை மனித ஜீனோமுடன் இணைத்து விடும் போன்ற பதில்களே அதற்குச் சரியானவை என்று நம்பிக்கொண்டே இருப்பதும் இன்றும் தொடர்கிறது. மேற்கண்ட இரண்டைவிடவும் பிரதானமான செயல்பாடும் இருகின்றது. திடீர் மாற்றத்தை உண்டாக்கக் கூடிய நொதியானது இயல்பாகவே மனிதனில் காணப்படுகிறது. APOBEC3G(A3G)- (apolipoprotein B-editing enzyme, catalytic polypeptide-like 3)என்ற நொதியானது வைரஸ் RNA லிருந்து முதலில் தோன்றும் cDNAவில் இருக்கும் Cயை Uவாக மாற்றி திடீர் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வைரஸ் அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஆனால் வைரஸில் இருக்கும் vif-virus infectivity factorஆனது A3G யை அழித்துவிடுகிறது. இதனால் எச்.ஐ.வி தாறு மாறாகப் பல்கிப் பெருகுகின்றது. இதற்குத் தீர்வாகத்தான் ஸ்டெம் செல் –மூலச் செல் சிகிச்சையை வெற்றிகரமாக கையாண்டு வெற்றியும் கண்டுள்ளனர். மூலச் செல்கள் –எல்லாவிதமான செல்களாக மாறும் திறனைக் கொண்டவையாகும். இதிலும் பல்வேறு வகைகள் உண்டு. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உலகிலேயே இரண்டாவது நோயாளியை(லண்டன்)-முதல் நோயாளி பெர்லின்- இந்த மூலச்செல் சிகிச்சையைக் கொண்டு முழுதும் குணமாக்கியுள்ளனர். CCR5/32/32 என்கிற ஜீனை செலுத்தி முப்பது மாதங்களில் குணமாக்கியுள்ளனர்.கேள்வியோடு தொடங்கிய இப்பகுதியை 90 கிட்ஸ்களுக்குப் பழக்கப்பட்ட கேள்வியோடே நிறைவு செய்வோம். புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? வரும். அந்தப்புரத்திற்கு அடிக்கடி சென்றால் வராமலிருக்குமா? 

REFERENCE: 

1,The Lancet HIV
2.Molecular Biology of the gene page no.503